திருவள்ளூர் மாவட்டம் ஆவடி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள காக்கலூர் பகுதியில் பல ஆண்டுகளாக விநாயகர் சிலைகளை செய்து வருபவர் செல்லா ராம். இவருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். இவருடைய முழு தொழில் விநாயகர் சிலைகளை செய்வதுதான். இவர் இந்த வருடம் கரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வருவதால் தொழில் முடங்கிவிட்டது.
ஆனாலும் வருடத்திற்கு 200 சிலைகள் செய்யக்கூடியவர் இந்த ஆண்டு வெறும் 40 சிலைகள் மட்டுமே செய்துள்ளார். ஆனால் காவல்துறை அதனை முழுவதுமாக விற்கக் கூடாது என்று வட்டாட்சியர் சீல் வைத்து விட்டனர். மீதம் உள்ள சிறியஅளவிலான விநாயகர் சிலைகள் எப்போது விற்பனையாகும் என்று கேள்விக் குறியோடு இருக்கிறார்.
இது குறித்து செல்லா ராம் கூறுகையில், இந்த வருடம் எனக்கு ஐந்து லட்ச ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஆறு மாதங்களுக்கு முன்பாக அறிவித்திருந்தால் இந்த நஷ்டம் எனக்கு வந்திருக்காது. மேலும் அரசு ஏதாவது எங்களுக்கு உதவி செய்யலாம் என்றார்.