ETV Bharat / state

பெண்ணிடம் நகை பறிப்பு; ஆம்புலன்ஸ் உதவியாளரை தாக்கிய பொதுமக்கள்! - police investigation

திருவள்ளூர்: விபத்தில் சிக்கிய பெண்ணிடம் நகைகளைத் திருடிய 108 ஆம்புலன்ஸ் உதவியாளரை பொதுமக்கள் அடித்து, உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்

ambulance
author img

By

Published : Aug 21, 2019, 11:46 AM IST

திருவள்ளூர் மாவட்டம் வெள்ளியூர் அருகே விபத்தில் சிக்கிய சிட்டம்பக்கம் கிராமத்தை சேர்ந்த ராஜன், லாவண்யா மற்றும் சரண்யா ஆகிய மூவரும் பலத்த காயத்துடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அதில் ராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த லாவண்யாவும், சரண்யாவும் சிகிச்சை பெற்றுவருகின்றனர் .

மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றபோது லாவண்யா அணிந்திருந்த கொலுசு, நகை, பணம் உள்ளிட்டவைகளை கழட்டியுள்ளார் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் உதவியாளர் அருண்குமார். ஆனால் அதனை மருத்துவமனையில் உறவினர்களிடமும் ஒப்படைக்காமல் கையோடு எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. மயக்கத்தில் இருந்து மீண்ட லாவண்யா தனது நகை, கொலுசு, செல்போன், பணம் குறித்து உறவினர்களிடம் தெரிவித்துள்ளார் .

ஆம்புலன்ஸ் உதவியாளரை தாக்கிய பொதுமக்கள்

108 ஆம்புலன்சில் இருந்த ஊழியர் தன்னிடமிருந்து கழட்டி பெற்றுக் கொண்டதை தெரிவித்தார். இதனை அடுத்து சம்பந்தப்பட்ட 108 ஆம்புலன்ஸ் உதவியாளரை லாவண்யாவின் உறவினர்கள் கேட்டதற்கு, தனக்கு ஏதும் தெரியாது என்று உதவியாளர் அருண் குமார் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லாவண்யாவின் உறவினர்கள் அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர் . அடி தாங்க முடியாமல் தான் திருடியதை ஒப்புக் கொண்ட அருண்குமாரை வெங்கல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அவர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டதில் பெண்ணிடம் திருடிய பொருட்களை ஒப்படைத்துள்ளார். ஆம்புலன்ஸ் உதவியாளரின் இந்த செயல் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Intro:21-08-2019

திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் மாவட்டத்தில் விபத்தில் சிக்கிய பெண்ணிடம் நகைகளைத் திருடிய 108 ஆம்புலன்ஸ் உதவியாளரை பொதுமக்கள் அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்

Body:21-08-2019

திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் மாவட்டத்தில் விபத்தில் சிக்கிய பெண்ணிடம் நகைகளைத் திருடிய 108 ஆம்புலன்ஸ் உதவியாளரை பொதுமக்கள் அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்

திருவள்ளூர் மாவட்டம் வெள்ளியூர் அருகே உள்ள சத்திரம் பகுதியில் செங்குன்றம் திருவள்ளூர் நெடுஞ் சாலையின் வளைவில் திரும்ப முற்பட்டபோது
பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மாகரல் கிராமத்தைச் சேர்ந்த ராஜன் வயது 30
சிட்டம்பக்கம் கிராமத்தை சேர்ந்தபிரவீன் குமார் என்பவரது மகள் லாவண்யா 20 மாகறல் மேட்டு காலனியை சேர்ந்த செல்வம் என்பவரது மகள் சரண்யா 17 ஆகிய மூவரும் வந்தபோது வெளியூர் சத்திரம் ஆயிரம் அரசு மாணவர் வீட்டுக்கு எதிரில் மகேந்திரா டூரிஸ்ட் வாகனம் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனத்தில் மோதியதில் மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு அங்கிருந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர் அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அதில் ராஜன் பரிதாபமாக உயிரிழந்தார் காயமடைந்த லாவண்யாவும் சரண்யாவும் சிகிச்சை பெற்றுவருகின்றனர் .

மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டபோது லாவண்யா அணிந்திருந்த கொலுசு நகை பணம் உள்ளிட்டவைகளை கழட்டி 108 வாகனத்தில் பணியாற்றி வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த உதவியாளர் அருண்குமார் சிகிச்சை அளிக்கும் போது இடையூறு ஏற்படுத்தும் என்று வாங்கி வைத்துக் கொண்டார் .ஆனால் அதனை மருத்துவமனையில் உறவினர்களிடமும் ஒப்படைக்காமல் கையோடு எடுத்துச் சென்றுள்ளார். இதனை விபத்தில் இருந்து மீளாமல் மயக்கத்தில் இருந்த லாவண்யா மயக்கம் தெளிந்ததும் தனது நகை கொலுசு செல்போன்பணம் குறித்து உறவினர்களிடம் தெரிவித்துள்ளார் .

108 ஆம்புலன்சில் இருந்த ஊழியர் தன்னிடமிருந்து கழட்டி பெற்றுக் கொண்டதை தெரிவித்தார். இதனை அடுத்து சம்பந்தப்பட்ட 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் லாவண்யாவின் உறவினர்கள் கேட்டதற்கு தனக்கு ஏதும் தெரியாது என்று ஆம்புலன்ஸ் உதவியாளர் அருண் குமார் கூறியுள்ளார் .இதனால் ஆத்திரமடைந்த லாவண்யாவின் உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் உதவியாளரை சரமாரியாக அடித்து உதைத்தனர் . அடி தாங்க முடியாமல் தான் லாவண்யாவின் நகைகளை எடுத்து வைத்து இருந்ததை ஒப்புக் கொண்டார். சங்கிலியை மட்டும் உறவினர்களிடம் ஒப்படைத்து விட்டு செல்போன் பணம் குறித்து ஏதும் தெரியாது என்று நாடகமாடினார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் அவரை வெங்கல் காவல் நிலையத்தில் அடித்து உதைத்து ஒப்படைத்தனர் பின்னர் விசாரணை மேற்கொண்டதில் கொலுசு மற்றும் செல்போன் உரிய பணத்தையும் அருண்குமார் ஒப்படைத்தார் .

உயிர்காக்கும் 108 ஆம்புலன்சில்விபத்தில் சிக்கும் எத்தனையோ உயிர்களை காப்பாற்றும் அர்ப்பணிப்போடு பணியாற்றி வரும் ஏராளமான ஊழியர்களுக்கு இடையே இப்படி ஒரு நபர் விபத்தில் படுகாயமடைந்த பெண்ணென்றும் பாராமல் அவர் அணிந்திருந்த நகை கொலுசு செல்போன் பணத்தை திருடிய அருண்குமா ரிடம் வெங்கல் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் 108 ஆம்புலன்ஸ் உதவியாளரின் இதுபோன்ற செயல் நேர்மையோடு பணியாற்றும் மற்ற 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் நடத்தையையும் பாதிக்கும் விதமாக அமைகிறது என்று பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.