ETV Bharat / state

மிக்ஜாம் புயல் எதிரொலி: திருவள்ளூர் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக வெளுத்து வாங்கும் கனமழை! - Tiruvallur rain

michaung cyclone: வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாகத் திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இரண்டாவது நாளாகக் கன மழை பெய்து வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக வெளுத்து வாங்கும் கனமழை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 4, 2023, 9:47 AM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக வெளுத்து வாங்கும் கனமழை

திருவள்ளூர்: வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள மிக்ஜாம் புயல் காரணமாகத் தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இந்தப் புயல் தாக்கத்தால் திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இரண்டாவது நாளாகக் கன மழை பெய்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் பள்ளிப்பட்டில் அதிகபட்சமாக 13 செ.மீ மழையும், ஊத்துக்கோட்டையில் 12 செ.மீ மழையும், பொன்னேரியில் 10 செ.மீ மழையும், சோழவரம், ஆவடி, திருத்தணி, திருவள்ளூர், தாமரைப்பாக்கத்தில் தலா 7 செ.மீ மழையும், கும்மிடிப்பூண்டி ஜமீன் கொரட்டூரில் தலா 6 செ.மீ மழையும், பூந்தமல்லி, செங்குன்றம், பூண்டி, ஆர்கே பேட்டையில் தலா 5 செ.மீ மழையும், திருவாலங்காடில் 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

மேலும், மாவட்டத்தில் உள்ள பூண்டி, சோழவரம், புழல், கண்ணன் தேர்வாய் கண்டிகை ஆகிய நீர்த்தேக்கத்திற்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஏரிகளைக் கடந்த 24 மணி நேரமாக நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

தொடர்ந்து, நீர் வரத்து அதிகரிக்கக் கூடும் என்பதால் அணை பாதுகாப்பு கருதி உபரி நீர் திறந்து விடப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், மாவட்டத்தில் உள்ள முக்கிய ஆறுகளான கொற்றலை ஆறு, ஆரணி ஆறு, கூவம் ஆறு பகுதியில் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 1,146 ஏரிகளில் நேற்று நிலவரப்படி 200 ஏரிகள் முழு கொள்ளவை எட்டியுள்ளது. முன் எச்சரிக்கை காரணமாக 133 பாதிக்கப்படக் கூடிய இடங்களாகக் கண்டறியப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் உள்ள மக்களை மீட்டுப் பாதுகாப்பான நிவாரண முகாம்களில் தங்க வைக்க 64 குழுக்கள் தாயார் நிலையில் உள்ளது.

மேலும், மாவட்டத்தில் 630 நிவாரண முகாம்கள் தாயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் பயிற்சி பெற்ற 4 ஆயிரத்து 480 வீரர்கள் தாயார் நிலையிலிருந்து வருகின்றனர். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 25 பேர் கொண்ட இரண்டு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் பொன்னேரி - சோழவரம் பகுதியில் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.

தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத் துறை சேர்ந்த 30 பேர் கொண்ட மீட்புக் குழுவினர் ஆவடி பூந்தமல்லி பகுதியில் தங்க வைத்துள்ளனர். இரண்டாவது நாளாகப் பகல் இரவு நேரத்தில் கன மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'மிக்ஜாம்' புயல் முன்னெச்சரிக்கை; துணை இயக்குநர்களுக்கு சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.