திருவள்ளூர்: பெரியபாளையம் அருகேவுள்ள தண்டலம் கிராமத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் கிராமப்புற மருத்துவமனை கட்டப்பட்டது. இதனைத் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திறந்துவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் நாசர், கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஜெ. கோவிந்தராசன், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
மருத்துவர்களுக்கு ஆளுநர் பாராட்டு:
அப்போது நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், “இன்றைய கால கட்டத்தில் 10 ரூபாய் கட்டணத்தில் மருத்துவ சிகிச்சையளிப்பது பாராட்டத்தக்கது. மருத்துவர்கள் சேவை அளப்பரியது” என்றார். மேலும், பிரெஞ்சு தத்துவஞானி வால்டைர் வாசங்கங்களை குறிப்பிட்டு மருத்துவர்களுக்கு ஆளுநர் பாராட்டு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள கரோனா தடுப்பு நெறிமுறைகளை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிதல், சானிடைசர் பயன்படுத்துவது, தகுந்த இடைவெளியை கடைபிடிப்பது போன்ற பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: மேகதாது அணை பிரச்னை தொடர்பாக நாளை அனைத்து கட்சிக் கூட்டம்: என்ன முடிவு எடுக்கப்பட இருக்கிறது?