ETV Bharat / state

சிறுமியிடம் பாலியல் சீண்டல்: அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

திருவள்ளூர்: 12 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

pocso
pocso
author img

By

Published : Jun 24, 2021, 3:40 PM IST

திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சுந்தரராஜன். இவர் தேர்வாய் கண்டிகையில் உள்ள அரசு ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும் இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது.

இந்த நிலையில், சுந்தரராஜன் தனது வீட்டின் அருகில் வசிக்கும் ஆறாம் வகுப்பு படித்துவரும் 12 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் சுந்தரராஜனிடம் கேட்கவே அவர், சிறுமியின் பெற்றோரை தரக்குறைவாக பேசியுள்ளார்.

f
கைதான ஆசிரியர் சுந்தரராஜன்

தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுந்தரராஜனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: பெற்றோர்களே புரிந்துக்கொள்ளுங்கள்... இவ்வளவு தான் போக்சோ!’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.