திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகியின் திருமண விழாவில் பங்கேற்ற அதன் தலைவர் ஜி.கே.வாசன் மணமக்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, கஞ்சா விற்பனை என சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசு சிறப்பாக செயல்படுகிறது. கல்வி, மருத்துவம் என அனைத்து துறையிலும் ஆளும் பாஜக சிறந்து விளங்குகிறது.
அதிமுகவுடனான கூட்டணி தொடரும். மத்திய அரசு செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி தொகையை தற்போது மாநில அரசுக்கு விடுவித்து உள்ளது. செலுத்தவேண்டிய மீதி ஜிஎஸ்டி தொகையையும் விரைவில் மத்திய அரசு விடுவிக்கும். மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்தியாவை வல்லரசு நாடாக தீவிர முனைப்பில் உள்ளது.
அதேபோல் பேரறிவாளன் விடுதலையை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் திட்டமிட்டு காங்கிரஸ் கட்சி தொண்டர்களை ஏமாற்றுகிறது" என்றார்.
அப்போது மாநில இளைஞரணி தலைவர் யுவராஜ், திருவள்ளூர் மாவட்ட தலைவர் சேகர், மாவட்ட இளைஞரணி தலைவர் செந்தில் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: பொதுத்தேர்வு எழுதாத 4.5 சதவீத மாணவர்களுக்கு, துணைத் தேர்வு எழுத நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு