கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக கார் ஒன்று வந்தது. அதனைப் போலீசார் நிறுத்த முயன்றபோது அந்த வாகனம் நிற்காமல் வேகமாகச் சென்றது.
அப்போது போலீசார் காரை துரத்தி வருவதைக் கண்டு காரை நிறுத்திவிட்டு கார் ஓட்டுநர் தப்பிச்சென்றார். அதன் பின்னர், போலீசார் அந்த வாகனத்தை சோதனையிட்டபோது அதில், தடை செய்யப்பட்ட போதைப் பொருள் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
பின்னர் கஞ்சா பயன்படுத்தப்பட்ட காரையும், காரில் மறைந்து வைத்திருந்த 80 லட்சம் ரூபாய் மதிப்புடைய 540 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய கார் ஓட்டுநரைத் போலீசார் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: காபி பவுடர் போல் கஞ்சா - விற்பனையாளர் கைது!