ETV Bharat / state

2 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு 1கிலோ அரிசி- அசத்தும் பசுமைத் தாயகம் அமைப்பு..!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் பசுமைத்தாயகம் அமைப்பு சார்பில் இரண்டு கிலோ பிளாஸ்டிக் கழிவுகளுக்கு, ஒரு கிலோ இலவச அரிசி வழங்கும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

plastic awareness
author img

By

Published : Nov 17, 2019, 12:53 AM IST

பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை ஒழிக்கும் விதமாகப் பசுமை தாயகம் அமைப்பு சார்பில் விழிப்புணர்வு பரப்புரை மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து வீடுகள்தோறும் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இரண்டு கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் கொடுப்போருக்கு ஒரு கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டது.

இதில் பொதுமக்கள் தங்கள் பகுதியிலிருந்த பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரித்து மூட்டை மூட்டையாக ஆர்வமுடன் கொண்டு வந்து அரிசியைப் பெற்றுச்சென்றனர். இதனைத் தொடர்ந்து கும்மிடிப்பூண்டி பகுதி முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் வகையில் பசுமை தாயகம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வாகனத்தில் சென்று பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.

பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பசுமை தாயகம் அமைப்பினர்.

பின்னர் இது குறித்து பாமக மாநில துணைத்தலைவர் செல்வராஜ் கூறுகையில், 'பிளாஸ்டிகின் தீமைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி இனிவரும் காலங்களில் கும்மிடிப்பூண்டி பகுதி முழுவதும் பிளாஸ்டிக் இல்லாத நகரமாக மாற்ற முயற்சி எடுப்போம்' என்றார்.

இதையும் படிங்க: பயோ பிளாஸ்டிக்கை கண்டுபிடித்து அரசுப்பள்ளி மாணவி அசத்தல்!

Intro:திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 2 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் முகாமை பசுமை தாயகம் மாநில துணை செயலாளர் பத்மநாபன் தலைமையில் பாமக மாநில துணை தலைவர் செல்வராஜ் வழங்கி துவக்கி வைத்தார்.

Body:திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 2 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை கொடுத்தவர்களுக்கு ஒரு கிலோ அரிசி வழங்கி பசுமைத் தாயகம் அமைப்பின் நிர்வாக பிரச்சாரத்தின் மூலம் வீடுகள்தோறும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்..

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 2 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் முகாமை பசுமை தாயகம் மாநில துணை செயலாளர் பத்மநாபன் தலைமையில் பாமக மாநில துணை தலைவர் செல்வராஜ் வழங்கி துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் பகுதியில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து மூட்டை மூட்டையாக ஆர்வமுடன் கொண்டு வந்து அவர்களிடம் தந்து ஒரு கிலோ அரிசியை பெற்றுச்சென்றனர். தொடர்ந்து கும்மிடிபூண்டி பகுதி முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் வகையில் பசுமை தாயகம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வாகனத்தில் சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வீடுகள்தோறும் சென்று அங்குள்ள பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து அவர்களுக்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்படும் என்றும் .

இதன் மூலம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிபூண்டி முழுவதும் நெகிழி இல்லாத நகரமாக மாற்ற நாங்கள் முயற்சி எடுப்போம் என்றும் தெரிவித்தார்கள்.

பேட்டி திரு செல்வராஜ் பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணைத்தலைவர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.