ETV Bharat / state

போலீசுக்கே கொலை மிரட்டல் விடுத்த குட்கா பாய்ஸ் கைது - குட்கா கடத்தியவர்கள் கைது

திருவள்ளூர் அருகே குட்கா கடத்தி வந்த வாகனத்தை சோதனை செய்ய முயன்ற காவல் துறையினருக்குக் கொலை மிரட்டல் விடுத்த நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

குட்கா பாய்ஸ்
குட்கா பாய்ஸ்
author img

By

Published : Apr 16, 2022, 10:48 PM IST

திருவள்ளூர்: போலிவாக்கம் சத்திரம் பகுதியில் மணவாளநகர் காவல் துறையினர் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சாலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் கன்டெய்னர் லாரி ஒன்று நின்றுகொண்டிருந்தது. அதிலிருந்த பொருள்களை அருகே இருந்த காரில் ஏற்றிக்கொண்டிருந்தையும் காவல் துறையினர் கண்டனர்.

உடனே அந்த வாகனத்தின் அருகே காவல் துறையினர் சென்றபோது அங்கு குட்கா பொருள்கள் இறக்கிக் கொண்டிருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அந்த வாகனத்தை சோதனை செய்ய முற்பட்டனர். ஆனால் அங்கிருந்த நான்கு பேர், வாகனத்தை சோதனை செய்யக்கூடாது எனவும் அப்படி சோதனை செய்தால் கொலை செய்துவிடுவோம் என காவல் துறையினருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

தொடர்ந்து வாகனத்தை சோதனை செய்தபோது சுமார் 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 150 கிலோ குட்கா பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடத்தலில் ஈடுபட்ட சென்னை மேடவாக்கம் பகுதியைச்சேர்ந்த புஷ்பராஜ் (29), கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (26), அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த அப்பாஸ் (38), பொன்னேரி பகுதியைச் சேர்ந்த உதயசங்கர் (33) ஆகிய நான்கு பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து, கடத்தலுக்குப் பயன்படுத்திய கார், கன்டெய்னர் லாரி ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து கன்டெய்னர் லாரி மூலம் சுமார் 150 கிலோ குட்கா பொருள்களை கடத்தி வந்ததும், இதனை திருவள்ளூர் அடுத்த போலிவாக்கம் சத்திரம் பகுதியில் காரில் எடுத்துச் சென்று பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனைக்கு பயன்படுத்த இருந்ததும் தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருள்கள்
பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருள்கள்

மேலும் போலீசார் சோதனையில் இருந்து தப்பிக்க கார் முன்பகுதி மற்றும் பின் பகுதிகளில் பிரஸ் என ஸ்டிக்கர் ஒட்டியதும் தெரியவந்தது. தொடர்ந்து இவர்கள் வேறு ஏதேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்து மணவாளநகர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மாதம் 30 ஆயிரம் ரூபாய் மாமூல் கேட்டு மிரட்டிய போலி எஸ்ஐ கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.