திருவள்ளூர்: முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு, உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தை 5 வயது சிறுவன் அனுப்பியது அக்கிராமத்தினர் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புட்லூர் கிராமத்தைச் சேர்ந்த தீபன், அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக கராத்தே கற்றுக் கொடுத்து வருகிறார். இந்த கராத்தே மாஸ்டர் தீபனின் நான்கரை வயது மகனான ஸ்ரீவிகாஸ், தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வருகிறார்.
ஸ்ரீவிகாஸ், முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தான் உண்டியலில் ஆசையாக சேமித்து வைத்திருந்த ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி உள்ளார்.
மேலும், தன் மழலை மொழியில் யாரும் பயப்படாதீங்க எல்லாம் சரியாகிடும், நிவாரண நிதிக்கு தாராளமாக பணம் அனுப்புங்க என்று பேசியுள்ளார். இந்த குழந்தையின் செயலை அறிந்த அக்கிராம மக்கள் நெகிழ்ந்து பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: ரெம்டெசிவிர் மருந்தை இணைதளத்தில் பதிவு செய்து பெறலாம்