திருவள்ளூர் மாவட்டம் செஞ்சி பானம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தி, வேணுகோபால் ஆகியோர். தனியார் மற்றும் அரசுத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர்கள், தங்களது குடும்பத்தினருடன் அப்பகுதியில் வசித்துவருகின்றனர். வழக்கம் போல் இரு குடும்பத்தினரும் நேற்றிரவு உறங்கி கொண்டிருந்தனர். அப்போது வட மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் கிருஷ்ணமூர்த்தி, வேணுகோபால் ஆகிய இருவரின் வீடுகளிலும் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர்.
இதைக் கண்ட இரு குடும்பத்தாரும் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். சத்தம் கேட்டதையடுத்து, அப்பகுதி மக்கள் கொள்ளையடிக்க முயன்ற ஐந்து பேர்களில் ஒருவரைப் பிடித்து மின்கம்பத்தில் கட்டிவைத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தப்பியோடிய நான்கு பேரைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர். இதனிடையே அதே பகுதியில் உள்ள மற்றொரு வீட்டில் மூன்று சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பட்டாக்கத்தி உடன் கேக் வெட்டிய நபர்கள் கைது