ETV Bharat / state

கும்மிடிப்பூண்டியில் பிரபல டயர் உற்பத்தி நிறுவனத்தில் தீ விபத்து

author img

By

Published : Jan 18, 2021, 10:46 AM IST

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் பிரபல டயர் உற்பத்தி நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பிரபல டயர் உற்பத்தி நிறுவனத்தில் தீ விபத்து

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் பல்வேறு உற்பத்தி ஆலைகள் இயங்கி வருகின்றன. இதில் எண்ணெய் உற்பத்தி, டயர் உற்பத்தி ஆகிய இரண்டு தொழிற்சாலைகளில் அடிக்கடி தீ விபத்து நிகழ்வது வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில், அங்குள்ள பிரபல டயர் உற்பத்தி நிறுவனத்தில் இன்று (ஜன.18) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கும்மிடிப்பூண்டி, சிப்காட், தேர்வாய், பொன்னேரி பகுதிகளைச் சேர்ந்த தீயணைப்புத் துறையினர், தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாகியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: காசிமேடு துறைமுகத்தில் தீ விபத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.