திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த அருங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் வேலு. இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சங்கீதா(21) என்பவருக்கும் ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் ஆனது. இந்த தம்பதிக்கு ஆறு மாத குழந்தை உள்ளது.
கடந்த வாரம் சங்கீதா காய்ச்சல் காரணமாக திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு போதிய வசதியில்லததால் பின்னர் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இளம்பெண் மர்மக் காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உயிரிழப்புகள் ஏற்படாமல் இருக்க சுகாதாரத் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் அருங்குளம் கிராமம் சுகாதார வசதியின்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்க:
மர்மக்காய்ச்சல் பாதிப்பு - சுகாதாரச் சீர்கேட்டை சரி செய்து தர கிராம மக்கள் கோரிக்கை!