திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பிலிப்ஸ்புரம் பகுதியிலிருந்து சித்திரை கிராமம் வரையில், கிட்டத்தட்ட ஆறு கிலோ மீட்டர் தூரத்திற்கு, கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு வண்டிப் பாதை வழியாக தான், விவசாயிகள் தாங்கள் விளைவித்த பயிர்களைக் கொண்டு செல்வது வழக்கம். காலப்போக்கில் விவசாயிகள் தனது பட்டா நிலங்களை அரசுக்கு வழங்கியதையடுத்து, வண்டிப் பாதைக்கு அருகில் தார் சாலைகள் அமைக்கப்பட்டன. இதனால், பயிர்களை நிலத்திலிருந்து சாலைக்குக் கொண்டு வருவதில், மிகவும் சுலபமாக இருந்துள்ளது.
இந்நிலையில், ஒருசில விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடம் அளித்தப் புகாரின் பெயரில் வருவாய்த்துறையினர் இன்று வண்டிப் பாதையை சீரமைக்க ஜேசிபி இயந்திரத்துடன் வந்திருந்தனர். அப்போது, அப்பகுதியில் விவசாயம் செய்யும் விவசாயிகள், வண்டிப்பாதை விவசாய நிலத்தை சீரமைத்தால் விவசாயம் பாதிக்கும் என்றும், முன்னறிவிப்பின்றி நிலங்களை அகற்றக் கூடாது என்றும் வருவாய்த்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் சில மணி நேரம் பதற்றம் நீடித்தது. பின்னர் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் பெயரில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடரும் என திருவள்ளூர் வட்டாட்சியர் விஜயகுமாரி தெரிவித்தார்.
இதையும் படிங்க: சொத்துக்காக சித்தியை அடித்துக்கொன்ற மகன்!