திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பொற்செல்வன். இவர் செவ்வாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தினேஷ் குமார் என்பவரிடம், தான் திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராகப் பணியாற்றிவருவதாகக் கூறியுள்ளார்.
மேலும், ஓட்டுநர் பணிக்கு தற்போது ஆட்கள் தேர்வு நடைபெறுவதால், 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் வேலையைப் பெற்றுத்தருவதாகக் கூறி தினேஷ் குமாரிடம் பணத்தை வாங்கியுள்ளார். ஆனால் வேலை வாங்கித்தராமல் இழுத்தடித்து வந்துள்ளார்.
இது குறித்து, செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் தினேஷ் குமார் கொடுத்த புகாரின்பேரில் பொற்செல்வனை காவல் துறையினர் கைதுசெய்தனர். பின்னர், மேற்கண்ட விசாரணையில் பொற்செல்வன் கடந்த நவம்பர் மாதம் காக்கலூர் பகுதியில் ஆர்டிஓ எனக்கூறி வாகன ஓட்டிகளிடம் பணம் வசூல் செய்து கைதானதும் தெரியவந்தது.
இதையடுத்து பொற்செல்வனை, காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கையும் களவுமாக சிக்கிய போலி மருத்துவர் தப்பி ஓட்டம்!