திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவிவருவதால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் குழந்தை உள்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனை பயன்படுத்தி போலி மருத்துவர்கள் பணம் சம்பாதிப்பதற்காக நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வந்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட சுகாதாரத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் தயாளன் தலைமையில் போலி மருத்துவர்கள் கைது செய்ய சிறப்பு குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில், வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே செயல்பட்டுவந்த மருத்துவமனையில் சோதனையிட்டபோது பூபாலன் (45) என்பவர் பிஎஸ்சி வரை படித்துவிட்டு, கடந்த சில ஆண்டுகளாக நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 2 முதல் 5 ரூபாய் வரை... 50 ஆண்டுகளாக ஏழைகளுக்கு சேவையளித்துவரும் மருத்துவமனை!