ETV Bharat / state

’திமுக ஒபிஎஸ்க்கு பின்புலமல்ல, பக்க பலம்’ - அமைச்சர் ஜெயக்குமார் - அதிமுக கட்சி

திமுக ஒபிஎஸ்க்கு பின்புலமல்ல, பக்க பலம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்
author img

By

Published : Nov 5, 2022, 3:04 PM IST

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சசிகலாவுக்கு எதிராக தர்ம யுத்தம் நடத்திய ஒபிஎஸ், சசிகலா காலில் விழுந்தவர். ஓபிஎஸ் தொடங்கியுள்ளது தர்ம யுத்தம் 2.0. அது தர்ம யுத்தம் அல்ல கர்ம யுத்தம்.

திமுகவுடன் சேர்ந்து அதிமுக கட்சி அலுவலகத்தை அவர் தாக்கினார். திமுக ஒபிஎஸ்க்கு பின்புலமல்ல, பக்க பலமாக உள்ளது. சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. முதலமைச்சர் தொகுதியை யாரும் படம் பிடிக்க முடியாது. எதிர்கட்சிகளை மட்டுமல்ல, 4-ஆவது தூணையும் திமுக மிரட்டுகிறது.

திமுக ஒபிஎஸ்க்கு பக்க பலம்

திமுக ஆட்சிக்கு வெளிப்படை தன்மை இல்லை. மழை பெய்யும் போது சாலை அமைக்கிறது அரசு. பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் அரசு துரிதமாக செயல்பட வேண்டும். அம்மா மருந்தகத்தின் மூலம் திமுக அரசு எந்த பயனையும் செய்வதில்லை. ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது. அரசு மக்களின் உயிரை பற்றி பொருட்படுத்தாமல் உள்ளது.

சொத்து வரியை ஏற்றிய அரசு எந்தவித அடிப்படை வசதியையும் செய்யவில்லை. ஆவின் பால் பாக்கெட் விலை உயர்வு திமுக அரசு மக்களுக்கு வழங்கிய பரிசு. தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை திமுக அரசு நிறுத்தியுள்ளது.

விளம்பரத்தாலேயே ஆட்சி உள்ளது. பொய்களாலேயே ஆட்சி நடக்கிறது. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த போது, எதிர்த்து ஓட்டு போட்டவர் ஓபிஎஸ். உப்பிட்டவருக்கு துரோகம் செய்தவர் ஓபிஎஸ்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: முதலில் கலப்படம் இல்லாத பால் கொடுங்க: தமிழக அரசை விளாசிய கிருஷ்ணசாமி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.