ETV Bharat / state

கருணாநிதி பிறந்தநாள்: ஏழைகளின் பசிதீர்க்கும் நாளாக கொண்டாட்டம்!

திருவள்ளூர்: முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 98ஆவது பிறந்தநாள் வேப்பம்பட்டு ஊராட்சி சார்பில் ஏழைகளின் பசி தீர்க்கும் நாளாகக் கொண்டாடப்பட்டது.

கலைஞர் பிறந்தநாளில் ஏழை மக்களுக்கு உணவு
கலைஞர் பிறந்தநாளில் ஏழை மக்களுக்கு உணவு
author img

By

Published : Jun 4, 2021, 2:07 AM IST

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர், பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினர் கிருஷ்ணசாமி ஆலோசனையின்படி திருவள்ளூர் ஒன்றியம் வேப்பம்பட்டு ஊராட்சியில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா ஏழைகளின் பசி தீர்க்கும் நாளாகக் கொண்டாடப்பட்டது.

ஏழை எளியோருக்கு உணவு

திருவள்ளூர் ஒன்றிய செயலாளர் ஜெயசீலன் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் சேகர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைஞர் கருணாநிதியின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தியதுடன் 300-க்கும் மேற்பட்ட ஏழை எளியோருக்கு உணவுப் பொட்டலம், தண்ணீர் பாட்டில், முகக் கவசம் வழங்கப்பட்டன.

கிளைச் செயலாளர் பாண்டியன் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைப்படி ஒன்றிய செயலாளர் ஜெயசீலன் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

இந்நிகழ்வில், திருவள்ளூர் ஒன்றிய துணைச் செயலாளர் சொக்கலிங்கம், ஒன்றிய பொருளாளர் ஆல்பர்ட், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் விமல், ஊராட்சி துணை செயலாளர் தாஸ், ஊராட்சி தொழில் நுட்ப அணி அமைப்பாளர் ஹேம்நாத், திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.