ETV Bharat / state

சிறுமிகளிடம் பணம் காட்டி அழைத்த மின்வாரிய அலுவலர் போக்சோ சட்டத்தில் கைது! - eb official arrested in pocso

திருவள்ளூர்:  குடிபோதையில் சிறுமிகளிடம் பணம் காண்பித்து அழைத்ததாக பெற்றோர் கொடுத்த புகாரின் பெயரில் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிறுமியிடம் பணம் காட்டி அழைத்த மின்வாரிய அலுவலர் போஸ்கோ சட்டத்தில் கைது!

author img

By

Published : Oct 21, 2020, 10:52 AM IST

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் அலமாதி வரையிலான உயர்மின் அழுத்த மின்சார மின்கம்பி அமைக்கும் பணியில் சிறப்பு பிரிவு உதவி செயற் பொறியாளராக சுரேஷ் என்பவர் பணியாற்றிவருகிறார்.

திருவள்ளூர் அடுத்த மணவாள நகரில் அவர் குடும்பம் உள்ள நிலையில் இவர் வெள்ளவேடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மேல்மனம்பேடு பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து அங்கு தங்கி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை குடிபோதையில் இருந்த சுரேஷ் 500 ரூபாய்‌ நோட்டை காண்பித்து சிறுமிகளை தவறான முறையில் அழைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமிகள் பெற்றோரிடம் கொடுத்த தகவலின் பேரில் அவர்கள் உடனடியாக வெள்ளவேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து, சுரேஷை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்திய காவல் துறையினர், போக்சோ சட்டத்தில் அவரை கைது செய்து பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.