திருப்பத்தூர் மாவட்டம் பெரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் எலக்ட்ரிசீயன் பாபு (32). இவருக்குத் திருமணமாகி இந்துஜா என்ற மனைவியும், சரண்ராஜ் (7), பிரித்திகா (9) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இவர் நேற்று (அக்.22) பெரியாங்குப்பம் பகுதியில் உள்ள ஷாருக்கான் வீட்டில் மின் இணைப்பு பழுது நீக்கம் செய்யச் சென்றிருந்தார். இரவு 9 மணியாகியும் பாபு வீட்டிற்குத் திரும்பாத காரணத்தினால், அவரது உறவினர் அச்சத்திலிருந்தனர்.
அப்போது, பாபு மின்சாரம் தாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தொலைப்பேசி வாயிலாக ஷாருக்கான் தகவல் தெரிவித்துள்ளார். உடனே அவரது உறவினர்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்குச் சென்றபோது, அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.