திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள சரஸ்வதி மில் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த டெம்போ வேன் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர்.
வேனில் இருந்தவர்களிடம் அலுவலர்கள் விசாரித்த போது அவர்கள் திருப்தியிலிருந்து காஞ்சிபுரத்திற்கு பட்டு சேலை எடுக்க வந்தாக தெரிவத்தனர். பின் அவர்கள் கொண்டு வந்த உடமைகளை சோதனை மேற்கொண்ட போது 3 லட்சத்து 29 ஆயிரத்து 500 ரூபாய் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். மேலும் அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாதால், அப்பணத்தை பறிமுதல் செய்து திருத்தணி கருவூல அலுவலகத்தில் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: வேட்பாளர் காரில் பதுக்கி வைத்திருந்த பணம் பறிமுதல்!