ETV Bharat / state

மகனிடமிருந்து சொத்தை மீட்டுத்தரக் கோரி வயது முதிர்ந்த தம்பதியர் கோரிக்கை!

author img

By

Published : Oct 7, 2020, 10:28 PM IST

திருவள்ளூர்: திருத்தணி அருகே சுமார் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள பூர்வீக சொத்தை அபகரித்துக் கொண்டு தங்களை அடித்து விரட்டிய மகனிடமிருந்து சொத்தை மீட்டுத் தரும்படி வயது முதிர்ந்த தம்பதியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Elderly couple demand redemption of property from son!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டத்துக்குட்பட்ட சின்ன மண்டலி கிராமத்தைச் சேர்ந்த தம்பதியர் கணபதி (75) - சந்திராம்மா (70). இவர்களுக்கு 3 மகன்களும், ஒரு மகள் உள்ளனர். இந்தநிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சொத்தில் ஒரு மகனுக்கு தலா 1 ஏக்கர் வீதம் மூன்று மகன்களுக்கு கணபதி சொத்தைப் பிரித்துக் கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து தன்னுடைய எதிர்காலத்துக்காக சுமார் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள 42 சென்ட் இடத்தை தனது பெயரில் வைத்திருந்தார். இந்நிலையில் அவரது மூன்றாவது மகன் மனோகரன், தனது குடும்பத்தினருடன் வசித்துவந்துள்ளார். பின்னர் வீட்டுக்கு புதிய மின் இணைப்பு வாங்குவதற்காக கணபதி செல்லும்போது, அந்த சிரமம் உங்களுக்கு வேண்டாம். எனது பெயரில் இந்த சொத்தை மாற்றி விடுங்கள் நான் உங்களை கடைசி வரை வைத்து காப்பாற்றுவேன் எனக் கூறி, சொத்தை தன் பெயருக்கு மாற்றியுள்ளார்.

பத்திரப்பதிவு முடிந்த சில மாதங்களில் கணபதி மற்றும் சந்திரம்மா ஆகிய இருவரையும் மனோகரன் வீட்டை விட்டு அடித்து விரட்டியுள்ளார். உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை நீங்கள் எங்காவது சென்றுவிடுங்கள் என கூறி அடித்து விரட்டி உள்ளார்.

மகனிடமிருந்து சொத்தை மீட்டுத்தரக்கோரி வயது முதிர்ந்த தம்பதியர் கோரிக்கை

இதையடுத்து அவர்கள் இருவரும் பேரம்பாக்கம் அருகே வசித்து வருகின்றனர். தங்கள் மகன் ஏமாற்றி சொத்துகளை அபகரித்துக் கொண்டதாக, 2005ஆம் ஆண்டு முதல் பல துறைகளில் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என வேதனைத் தெரிவித்துள்ளனர். எனவே தமிழ்நாடு அரசு இதுகுறித்து உரிய விசாரணை செய்து தனது மகன் அபகரித்த சொத்தை மீட்டுத் தரவேண்டும் என முதியவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க:இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.