திருவள்ளூர் மாவட்டம் எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளரும், கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய தலைவருமான கே.எம்.எஸ். சிவக்குமாரின் இல்ல காதணி விழாவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த விழா முடிந்து பின் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "திமுகவை சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சென்னை மேயருக்கு மூன்றாவது வரிசையிலும், துணை மேயருக்கு இரண்டாவது வரிசையிலும் இருக்கை கொடுத்துள்ளனர். இதுதான் திராவிட மாடல் ஆட்சி. திமுக ஆட்சியில் யாருக்கும் உரிய பிரதிநிதித்துவம் கொடுப்பதில்லை.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள கொசத்தலை ஆற்றின் குறுக்கே ஆந்திரா மாநில அரசு அணை கட்டுவதை வண்மையாக கண்டிக்கிறேன். அதனை தடுக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக கட்சி தொண்டர்களால் நடத்தப்படும் கட்சி. அதில் டிடிவி தினகரன், சசிகலாவை போன்றோருக்கு இடமில்லை.
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆவணங்கள் திருடப்பட்டு 50 நாட்கள் ஆகியும் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருந்தது. நீதிமன்றத்திற்கு சென்ற பிறகே விசாரணை தொடங்கியது. பிரதான எதிர்க்கட்சி கட்சிக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண மக்கள் புகார் கொடுத்தால் எப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்று எண்ணி பாருங்கள் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சிறுவன் சுதீஷின் இதயம் உட்பட உடல் உறுப்புகள் தானம் - இறந்தும் வாழப்போகும் சிறுவன் சுதீஷ்