சென்னை அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிகுமார். இவரும், திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரும் திருவள்ளூர் மாவட்டம் ஊத்து கோட்டைக்கு வந்து மது அருந்தியுள்ளனர்.
பின்னர், மது போதையில் இருந்த ஹரிகுமார் காரை ஓட்டிச் சென்றபோது சீத்தஞ்சேரி அருகே நிலை தடுமாறி சாலையோரத்திலுள்ள புளியமரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இரண்டு கால்களும் நசுங்கிய ஹரி குமார், திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
மேலும், அவருடனிருந்த ராஜசேகரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கார் விபத்து காரணமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பென்னாலூர் பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இருசக்கர வாகன விபத்தில் 2 பேர் உயிரிழப்பு - சிசிடிவி காணொலி வெளியீடு