திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதிகளில் 13 பேருக்கு கரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதனால் அப்பகுதி கட்டுப்பாட்டு மண்டலம் (containment zone) என அறிவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டுவருகிறது. அதனால், காவல்துறையினர் அப்பகுதி மக்கள் வெளியேறுவதைக் கண்காணிக்க ட்ரோன் கேமராவை பயன்படுத்திவருகின்றனர்.
அதன்படி, ட்ரோன் கேமரா கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட போது அதனைப் பார்த்து, கும்பலாக இருப்பவர்கள் தலைதெறிக்க ஓடுகின்றனர். அதில் கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள் முதல், சூதாட்டம் விளையாடும் பெரியவர்கள் வரை அடங்குவார்கள்.
இதையும் படிங்க: கரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் ட்ரோன் மூலம் கண்காணிப்பு!