திருவள்ளூர்: கிழக்கு மாவட்டம் பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் டி. ஜெ. கோவிந்தராஜ் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். அப்போது சமையல் சிலிண்டருக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கா. சுந்தரம். தகவல் தொழில் நுட்ப அணி இணை செயலாளர் சிஎச். சேகர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி, ஊராட்சி ஒன்றிய சேர்மன் ரவி, மாவட்ட அவை தலைவர் பகலவன், மாவட்ட துணை செயலாளர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் உதயசூரியன்.மாவட்ட துணை செயலாளர் கோளூர் கதிரவன். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வெற்றி உள்ளிட்ட திமுகவினர் கலந்துக்கொண்டனர்.
இதையும் படிங்க: மக்கள் நீதி மய்யம் கட்சி பிரச்சாரம்: மக்கள் குறைகளை கேட்டறிந்த கமல்ஹாசன்