ETV Bharat / state

பாஜகவை இங்கையே வைத்து செய்யணும்...! - ஆபாசமாக பேசிய ஆர்.எஸ். பாரதி - பாஜகவை இங்கையே வைத்து செய்யனும் என ஆபாசமாக பேசிய ஆர்.எஸ். பாரதி

திருவள்ளூர்: மீஞ்சூரில் நடந்த உறுப்பினர்கள் கூட்டத்திக் கலந்துகொண்ட திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, பாஜகவை வன்புணர்வு செய்யவேண்டுமென ஆபாசமான கருத்தை கூறியுள்ளார்.

பாஜக குறித்து பேசிய ஆர்.எஸ். பாரதி
பாஜக குறித்து பேசிய ஆர்.எஸ். பாரதி
author img

By

Published : Jan 28, 2020, 1:36 PM IST

திருவள்ளூர் வடக்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் மீஞ்சூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, மாவட்ட செயலாளர் கி.வேணு, ஒன்றிய கழகச் செயலாளர் எம்.எஸ்.கே. ரமேஷ் உள்ளிட்ட திரளான கட்சியினர் கலந்துகொண்டனர்.

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றது குறித்தும் வருங்காலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றுவது குறித்தும் ஆர்.எஸ். பாரதி கட்சியினருக்கு ஆலோசனை வழங்கினார்.

இதையடுத்து அவர் பேசுகையில், உள்ளாட்சித் தேர்தலில் கட்சிக்கு எதிராகச் செயல்பட்ட திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றார். அவ்வாறு செய்தால் ஆள்பிடிக்கும் பாஜக அழைத்துச் சென்றுவிடுவார்கள் எனக் குறிப்பிட்ட அவர், அவர்களை இங்கேயே வைத்து வன்புணர்வு செய்யவேண்டுமென ஆபாசமாகப் பேசினார்.

பாஜக குறித்து பேசிய ஆர்.எஸ். பாரதி

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியின் பேச்சால் திமுகவினர் அதிர்ச்சியடைந்தனர். மேலும், ஆணாய் பிறந்து வீணாய்போன காங்கிரஸ்காரர்கள் அடம்பிடித்ததால்தான் திருவள்ளூரில் திமுக எம்.பி. உருவாக முடியாமல் போனதாக பேசி மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார். ஏற்கனவே துரைமுருகன் பேசிய விவகாரம் இப்போதுதான் சாந்தமாகி இரு கட்சிகளும் இணக்கமான சூழலில் ஆர்.எஸ். பாரதியின் கருத்து மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதையும் படிங்க: மாநகராட்சி அலுவலகத்தை திமுக கட்சி அலுவலகமாக மாற்றிய கதிர் ஆனந்தின் ஃபார்முலா..!

Intro:திருவள்ளூர் வடக்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் மீஞ்சூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் திமுக கழக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி மாவட்ட செயலாளர் கிவேணு ஒன்றிய கழகச் செயலாளர் எம் எஸ் கே ரமேஷ் மற்றும் திரளான கட்சியினர் கலந்து கொண்டனர்.
Body:திருவள்ளூர் வடக்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் மீஞ்சூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் திமுக கழக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி மாவட்ட செயலாளர் கிவேணு ஒன்றிய கழகச் செயலாளர் எம் எஸ் கே ரமேஷ் மற்றும் திரளான கட்சியினர் கலந்து கொண்டனர்.
உள்ளாட்சித் தேர்தலில் பெற்ற வெற்றி குறித்தும் வருங்காலத்தில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றுவது குறித்தும் ஆர் எஸ் பாரதி கட்சியினருக்கு ஆலோசனை வழங்கி அவர் பேசுகையில்
உள்ளாட்சித் தேர்தலில் கட்சிக்கு எதிராக செயல்பட்ட திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் அவ்வாறு செய்தால் ஆள்பிடிக்கும் பாஜக அழைத்துச் சென்று விடுவார்கள் என்றும் அவர்களை இங்கேயே வைத்து கற்பழிக்கவேண்டுமன ஆபாசமாக பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதியின் பேச்சால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர் மேலும் ஆணாய் பிறந்து வீணாய்ப் போன காங்கிரஸ்காரர்கள் அடம் பிடித்ததால் தான் திருவள்ளூரில் திமுக எம்பி உருவாக முடியாமல் போனதாக பேசி மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார்.....Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.