கரோனா வைரஸ் தொற்று பரவுதல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்துவருகின்றனர்.
மேலும், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குப் பல்வேறு அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள், சமூக தொண்டு நிறுவனங்கள் பலர் உதவிக்கரம் நீட்டிவருகின்றனர்.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் தெற்கு ஒன்றிய திமுகவினர், சோழவரம் ஒன்றியத்துக்குள்பட்ட ஆங்காடு பகுதியில் சுமார் 1300 குடும்பங்களுக்கு தலா ஐந்து கிலோ அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருள்களை வழங்கினர்.
இதையும் படிங்க: உஷார்...அரசு பயன்பாட்டிற்கு ஸூம் ஆப் பாதுகாப்பற்றது - உள்துறை அமைச்சகம்