திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் பேருந்து நிறுத்தம் இல்லாமல் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். பேருந்து நிறுத்தம் அமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று திருவள்ளூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேந்திரன் சார்பில், சட்டப்பேரவை உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் செலவில் பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டது.
அதேபோல், கன்னிமாபேட்டை பகுதியிலும் பூண்டி ஒன்றிய குழு துணைத் தலைவர் நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் செலவில் பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், இரண்டு பேருந்து நிறுத்தத்தை, திருவள்ளூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் மக்களின் பயன்பாட்டிற்காக நேற்று (ஆக.15) திறந்து வைத்தார். விழாவில், பூண்டி ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் மகாலட்சுமி மோதிலால் மற்றும் திமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் வானகரம் மலர் சந்தை செயல்படும்!