திருவள்ளூர் மாவட்டம் திருவெற்றியூர் கே.வி.கே. குப்பத்தைச் சேர்ந்தவர் கே.கே.பி.சாமி (வயது 58 ). இவர் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திருவெற்றியூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவி வகித்து வந்தார். கடந்த சில மாதங்களாக சிறுநீரக தொற்று நோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நேற்றிரவு வீடு திரும்பினார்.
இந்நிலையில், இன்று அதிகாலை 5.30 மணிக்கு கே.கே.பி.சாமி எம்.ஏல்.ஏ உயிரிழந்தார். அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டுள்ளது. இவர் 2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டின் மீன்வளத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். மேலும், இவர் திமுகவின் மீனவர் அணி செயலாளராகவும் இருந்தார். கே.கே.பி.சாமி உடலுக்கு அஞ்சலி செலுத்த பகல் 12 மணியளவில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், திருவொற்றியூரில் உள்ள அவரது இல்லத்திற்கு வரவிருக்கிறார் என கூறப்படுகிறது.