திமுக சட்டப்பேரவை வேட்பாளர் சா.மு நாசர் ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் பரமேஸ்வரியிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தார். மங்கள வாத்தியங்கள் முழங்க கூட்டணி கட்சியினருடன் வந்து சா.மு.நாசர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
முன்னதாக ஆவடி, காமராஜ் நகரில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த திமுக வேட்பாளர் நாசர், பட்டாபிராம் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "234 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆவடியை வெற்றிபெற செய்வேன். தங்கத் தொகுதியாக ஆவடியை மாற்ற பாடுபடுவேன்" என்றார்.
இதையும் படிங்க:'சீனி சக்கர சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா' - திமுகவை விமர்சித்த ராஜேந்திர பாலாஜி