தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் பரப்புரை முன்னெடுப்பாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திவருகின்றன.
இந்நிலையில் திமுகவினர் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பில் கழகப் பொறுப்பாளர் டி.ஜே.கோவிந்தராஜன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் திமுக கொடியை கையில் ஏந்தி இருசக்கர வாகனப் பேரணியில் ஈடுபட்டனர்.
பெருவாயல் பகுதியில் அமைந்துள்ள திமுக மாவட்ட அலுவலகம் முன்பு தொடங்கிய இப்பேரணி, கவரப்பேட்டை பஜார் முக்கிய வீதிகளில் பேரணியாகச் சென்றனர்.
இதனைத்தொடர்ந்து கவரப்பேட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் சார்பில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் 'ஸ்டாலின் தான் வராரு விடியல் தர போறாரு' என்ற பாடல் அடங்கிய இசைத்தட்டை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் டி.ஜே.கோவிந்தராஜன் வெளியிட்டார். திமுகவின் முக்கிய நிர்வாகிகள் அதனை பெற்றுக்கொண்டனர்.
'ஸ்டாலின்தான் வராரு... விடியலை தர போறாரு...' - திமுகவின் பாடல் இசைத்தட்டு வெளியீடு! - திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் 'ஸ்டாலின்தான் வராரு விடியல் தர போறாரு' என்ற பாடல் இசைத் தட்டு வெளியீட்டு விழா நடைபெற்றது.