திருவள்ளூரில் கரோனா பாதிப்பு காரணமாக, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.
கரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கே வியாபாரிகளை அனுப்பி, அத்தியாவசியப் பொருட்களை விற்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது.
இருப்பினும், திருவள்ளூரில் சில கடைகளில் வியாபாரிகள் காய்கறிகளை அதிக விலைக்கு விற்பனை செய்தனர். இத்தகவலானது மாவட்ட நிர்வாகத்திற்குத் தெரியவர மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கடைகளிலும் சிறப்பு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் அதிக விலைக்கு காய்கறிகளை விற்பனை செய்த வியாபாரிகளை அலுவலர்கள் எச்சரித்தனர். இந்த ஆய்வின்போது லைட் ஹவுஸ் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேந்திரன், ஊராட்சி செயலாளர் மகேந்திரன், கோபால் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: முகக் கவசம் - எவ்வாறு கையாள வேண்டும் என விளக்குகிறார் மருத்துவர் வெங்கடேஷ்