திருவள்ளூர்: கடந்த சில நாள்களாகப் பெய்த வடகிழக்குப் பருவமழையால் திருத்தணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. ஆற்காடு குப்பம் கொசஸ்தலை ஆற்றிலிருந்து வெளியேறும் உபரி நீரால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்நிலையில் கனமழையால் கனகம்மா சத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் வெள்ள நீர் புகுந்ததால் நோயாளிகள் அங்கிருந்து அலறியடித்து வெளியேறினர்.
இருப்பினும் இங்கு தொடர்ந்து நோயாளிகளுக்கு முழங்கால் அளவு தேங்கியுள்ள வெள்ள நீரிலேயே நிற்கவைத்து நோய் பரிசோதனை செய்யும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. வெள்ள நீரால் நோய்த்தொற்று ஏற்படாமலிருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: Watch Video: தேவாலயத்திற்குள் சிக்கிக்கொண்டவர்கள் பாதுகாப்பாக மீட்பு