ETV Bharat / state

சென்னை டூ திருவள்ளூர் சைக்கிளிங் செய்து ஆய்வு செய்த டிஜிபி!

சென்னையிலிருந்து திருவள்ளூருக்கு 45 கிலோ மீட்டர் சைக்கிளிங் பயணம் மேற்கொண்டு தீயணைப்புத்துறை அலுவலகம், காவல் நிலையத்தில் ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்தார் டிஜிபி சைலேந்திர பாபு.

சென்னை டூ திருவள்ளூர் சைக்கிளிங் செய்து ஆய்வு செய்த டிஜிபி

author img

By

Published : Oct 17, 2021, 2:19 PM IST

திருவள்ளூர்: தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு காவல்துறை இயக்குநராக இருப்பவர் சைலேந்திரபாபு. தனது சமூக வலைதளங்களில் சைக்கிளிங், உடற்பயிற்சி, உடல் நலம் சார்ந்த விஷயங்களை பதிவிட்டு இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

அந்தவகையில் இன்று (அக். 17) காலை வழக்கமான தன்னுடைய சைக்கிளிங் பயணத்தை மேற்கொண்டார். சென்னையிலிருந்து புறப்பட்டு பூந்தமல்லி, வெள்ளவேடு, மணவாளநகர் வழியாக திருவள்ளூருக்கு 45 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்தார்.

சென்னை டூ திருவள்ளூர் சைக்கிளிங்

திருவள்ளூரில் உள்ள தீயணைப்புத்துறை அலுவலகத்தை ஆய்வு செய்து தீயணைப்பு வீரர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

25 ஆண்டுகளாக தீயணைப்பு வீரர்களாக பணிபுரிந்தவர்களை சிறப்பு நிலைய அலுவலராக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசிடம் தெரிவித்து பெற்றுத் தந்தமைக்கு திருவள்ளூர் தீயணைப்பு வீரர்கள் டிஜிபிக்கு நன்றி தெரிவித்தனர்.

சென்னை டூ திருவள்ளூர் சைக்கிளிங் செய்து ஆய்வு செய்த டிஜிபி
சென்னை டூ திருவள்ளூர் சைக்கிளிங் செய்து ஆய்வு செய்த டிஜிபி

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருவள்ளூர் தாலுக்கா காவல் நிலையத்திற்கு சென்றார். திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன் மற்றும் அலுவலர்கள் அவருக்கு பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.

காவல் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளை ஆய்வு செய்தார். மகளிர் காவல் நிலையத்திற்கும் சென்று காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்து, காவலர் குடியிருப்பில் காவலர்களின் குடும்பத்தாரையும், அவர்களது குழந்தைகளிடமும் கலந்துரையாடி புத்தகங்களைப் பரிசாக வழங்கினார்.

மேலும் சிலம்பாட்டம் ஆடி அசத்திய சிறுவனை பாராட்டி பரிசு வழங்கினார். குறைகள் இருந்தால் உடனடியாக தன்னை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என காவலர்களிடம் டிஜிபி சைலேந்திரபாபு கூறினார்.

இதையும் படிங்க: பொன்விழா காணும் அதிமுக.. ஒற்றை தலைமைக்கு மாறுமா? தொண்டர்கள் எதிர்பார்ப்பு என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.