திருவள்ளூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று எந்த தலைவர்களும் இல்லாததால் பால் மற்றும் மருந்து கடைகள் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டன இதனால் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன .
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதில் 2,9, 16, 23, 30 ,ஆகிய ஞாயிற்றுக் கிழமைகளில் எந்த தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.
அதன்படி முதல் ஞாயிற்றுக் கிழமையான இன்று (ஆகஸ்ட் 2) திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளான ஆவடி மாநகராட்சி, திருவேற்காடு நகராட்சி, திருநின்றவூர், திருமழிசை நாரவாரிக்குப்பம் கும்மிடிப்பூண்டி பொன்னேரி மீஞ்சூர் பேரூராட்சிகள்,
வில்லிவாக்கம், மீஞ்சூர் ஊராட்சி திருவள்ளூர் நகராட்சி பூவிருந்தவல்லி, ஈக்காடு, சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளும் இன்று முழு கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் எந்த தளர்வுகளின்றி பால் கடைகள் மருந்தகங்கள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இந்நிலையில் இரு சக்கர வாகனங்களில் செல்வோரை காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.