திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு மற்றும் இதர காய்ச்சல்களை கட்டுப்படுத்த பொது சுகாதாரத்துறை, ஊரக உள்ளாட்சித்துறை, நகர்புற உள்ளாட்சித் துறைகள் சார்பாக டெங்கு கொசு ஒழிப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது.
ஆய்வுக்கூட்டத்தில், டெங்கு மற்றும் இதர தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள் , மாநகராட்சி ஆணையர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், டெங்கு கொசுக்களை ஒழித்திடும் பொருட்டு மேற்கொள்ளப்படும் புகை மருந்து தெளிக்கும் பணிகள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், சிறு மின்விசை பம்பு தொட்டிகள் வாரம் ஒரு முறை கழுவி சுத்தம் செய்வதையும், தினசரி வழங்கப்படும் குடிநீர் குளோரினேஷன் செய்து வழங்குவது உறுதி செய்ய வேண்டும்.
டெங்கு மற்றும் இதர சுகாதாரப் பணியாளர்கள் கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அழிக்கும் பணிகள் மேற்கொள்வதை கண்காணிக்க நகராட்சி மாநகராட்சி தடுப்பு கண்காணிப்புக் குழு 10, பேரூராட்சி தடுப்பு கண்காணிப்புக் குழு 6, மற்றும் கிராம நகராட்சி தடுப்பு கண்காணிப்புக்குழு 13 என மொத்தம் 29 குழுக்களும், துணை ஆட்சியர் 4 உதவி இயக்குநர் நிலையில் மண்டல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நியமிக்கப்பட்ட மண்டல அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஊராட்சி ஒன்றியங்கள் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் டெங்கு மற்றும் இதர தொற்று நோய்கள் தடுக்க தேவையான அனைத்து தடுப்பு நடடிக்கைகள் ஆய்வு செய்து தினசரி அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
இதையும் படிங்க : கரோனா சிகிச்சைக்காக 7 லட்சம் வசூலித்த தனியார் மருத்துவமனை - உயர் நீதிமன்றத்தில் வழக்கு!