ETV Bharat / state

இழப்பீட்டுத் தொகை வழங்க தாமதம்: அலுவலகத்தில் உள்ள பொருள்களை ஜப்தி செய்ய உத்தரவு - ஆதிதிராவிடர் நலத்துறை

திருத்தணி அருகே கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு வழங்காமல் தாமதப்படுத்தியதால் அலுவலகத்தில் உள்ள பொருள்களை ஜப்தி செய்ய உத்தரவிடப்பட்டது.

இழப்பீட்டுத் தொகை வழங்க தாமதம்
அலுவலகம்
author img

By

Published : Nov 18, 2021, 9:20 AM IST

திருவள்ளூர்: திருத்தணி வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி, போபால்ராஜ், ராணி, பாலாஜி, புவனேஸ்வரி, சசிகலா, ஆகிய ஆறு பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்குச் சொந்தமான 1.30 ஏக்கர் வேளாண் நிலம் அதே ஊரில் இருந்துள்ளது.

2005ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத் துறையின் (AdiDravidar Welfare Department) சார்பில் பொதுமக்களுக்கு இலவச இடம் வழங்க இவ்விடம் கையகப்படுத்தப்பட்டது.

ஆனால் இடத்திற்கான இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை என்று 2005ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் இக்குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரும் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு எதிராக வழக்குத் தொடுத்தனர்.

இதனடிப்படையில் 2016ஆம் ஆண்டு இடம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை ஆதிதிராவிடர் நலம் தனி வட்டாட்சியர் சார்பில் இழப்பீட்டுத் தொகை வழங்காமல் கடந்த ஐந்து ஆண்டு காலமாக காலதாமதம் செய்துள்ளனர்.

இதன் அடிப்படையில் 2021 நவம்பர் 16இல் திருத்தணி சார்பு நீதிமன்றம், நிலை இழப்பீட்டுத் தொகை வாதியின் ஆறு நபர்களுக்கு 19 லட்சத்து 99 ஆயிரத்து 903 ரூபாய் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதனை வழங்கவில்லை என்றால் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கிவரும் ஆதிதிராவிடர் நலம் தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பொருள்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டப்பட்டது.

அதனடிப்படையில் நீதிமன்ற உத்தரவை சார்பு நீதிமன்ற ஆமினா நரசிம்மராஜ், வாதியின் வழக்கறிஞர் மோகன்ராஜு ஆகியோர் தனி வட்டாட்சியர் தேவியிடம் நீதிமன்றம் வழங்கிய ஜப்தி நோட்டீஸை வழங்கிவிட்டு தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த டேபிள், சேர், ஃபேன் போன்ற பொருள்களை அலுவலகத்திலிருந்து எடுத்து வெளியே ஆட்டோவில் கொண்டுவந்த வண்டியில் ஏற்றினார்கள்.

இதனால் தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இழப்பீட்டுத் தொகை வழங்காததால் அரசு அலுவலகத்தில் பொருள்கள் ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் திருத்தணியில் பரபரப்பு சம்பவமாகப் பேசப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: ஏரி ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி: 7 ஆண்டுகளாக தனி ஆளாக போராடும் 70 வயது மூதாட்டி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.