திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்கு உள்பட்ட சரவணப்பொய்கை திருக்குளம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அன்றாடக் கூலி தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள்.
இவர்கள் அதே பகுதியில் சுப்பிரமணியசாமி பண்டகசாலை ஜேஜே 582 (J.J 582) என்ற ரேஷன் கடையில் பொருள்கள் வாங்கி வருகிறார்கள். இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு இந்த நியாய விலை கடை மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இங்கு அதே பகுதியை சேர்ந்த நந்தன் என்பவர் தனது குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசின் பொங்கல் தொகுப்பினை பெற்றுள்ளார். அப்போது, பொங்கல் பரிசுத் தொகுப்புக்குள் இருந்த புளி பார்சலில் செத்துப்போன பல்லி ஒன்று கிடந்துள்ளது.
எலும்புக்கூடாக அந்தப் பல்லி இருந்ததை கண்டவுடன் அதிர்ச்சியடைந்த பயனாளி நந்தன் ரேஷன் கடை ஊழியர்களிடம் கேட்டுள்ளார்.
ஆனால், “அவர்கள் தக்க பதில் தராமல் அரசியல்வாதிகளை பார்த்துக்கொள் சத்தம் போட்டால் என்ன செய்வேன் என்று தெரியாது.. என்று தகாத வார்த்தைகளை பேசியுள்ளார். இந்நிலையில், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நந்தன் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க : பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட குழந்தைகள் மயக்கம் - மருத்துவமனையில் சிகிச்சை