திருவள்ளூர் மாவட்டம் திருமணிகுப்பம் காமராஜர் தெருவில் அரசு மானியத்தில் கட்டப்பட்ட தொகுப்பு வீட்டில் வசித்துவருபவர் சத்யராஜ்-பிரேமா தம்பதி. அவர்களுக்கு 7 வயது மகன், 4 வயதில் மகள் உள்ளனர்.
சத்யராஜ் கூலி வேலை செய்துவருகிறார். அவர் வசிக்கும் வீடு மிகவும் பழுதடைந்து இடிந்துவிழும் நிலையிலிருந்தது.
அதனால் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் புதிய வீடு கட்டித்தர கோரிக்கைவைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று இடியுடன்கூடிய கனமழையால் அவரது வீட்டின் சுவர் இடிந்துவிழுந்தது.
நல்வாய்ப்பாக அதில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. இது குறித்து அவர், தனது வீடு முற்றிலும் இடிந்து விழுந்துள்ளதால் தங்குவதற்கு இடமின்றி தவித்துவருவதாகவும், அரசு புதிய வீடு கட்டித்தர வேண்டும் எனவும் கோரிக்கைவைத்தார்.
இதையும் படிங்க: இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து - இருவர் உயிரிழப்பு!