திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு அருகிலுள்ள பெருமாள்பட்டு ஊராட்சியில் பொதுமக்களுக்கு கரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியம், ரவி, மருத்துவர் மோனிகா, துணைத் தலைவர் செல்வி நாகரத்தினம் முன்னிலை வகித்தனர்.
ஒன்றியக்குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் இந்த முகாமை தொடங்கி வைத்தார். பின்னர், பொது மக்களிடம் அவர் பேசுகையில், கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும்.
பெருமாள்பட்டு ஊராட்சியில் வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க வேண்டும். இருமல், சளி உள்ளவர்கள் உடனடியாக பெருமாள்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க வேண்டும் என்றார். இதில் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
மேலும், இந்த முகாமில் மொத்தம் 250 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.