திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் காவல் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து காவலர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர் உள்ளிட்ட எட்டு பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இதனை அடுத்து அவர்கள் அனைவரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மேலும் சுகாதாரத் துறை அலுவலர்கள் காவல் நிலையத்தை தூய்மைப்படுத்தி கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
ஒரே காவல் நிலையத்தில் எட்டு பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது அங்கிருக்கும் காவல் துறையினர் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 8 காவலர்களுக்கு கரோனா - பெரியபாளையம் காவல் நிலையம்
திருவள்ளூர்: பெரியபாளையம் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 8 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.