திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி மாநகராட்சி, பூந்தமல்லி, திருவேற்காடு, மீஞ்சூர், பொன்னேரி, திருவள்ளூர் நகராட்சி, திருத்தணி நகராட்சி, திருநின்றவூர் ஆகிய ஒன்றியங்களில் இன்று (ஆக.18) ஒரே நாளில் 489 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
இதனையடுத்து மாவட்டத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 618 ஆக உயர்ந்துள்ளது.
நோய்தொற்று பாதிக்கப்பட்டவர்கள் திருவள்ளூர் பூந்தமல்லி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (ஆக.18) ஒரே நாளில் எட்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 346 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டத்தில் இதுவரை 16 ஆயிரத்து 313 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மேலும் மருத்துவமனையில் மூன்று ஆயிரத்து 959 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.