திருவள்ளூர் டிடி மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் டிடி நாயுடு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தார். அதில், “2020 ஏப்ரல் மாதம் முதல் மார்ச் வரை திருவள்ளூர் மாவட்டம் குன்னவலத்திலுள்ள மருத்துவக் கல்லூரியை கரோனா சிகிச்சை வார்டாக தமிழ்நாடு அரசு பயன்படுத்தியுள்ளது.
அதற்காக சுமார் 2900 படுக்கைகளும், வென்டிலேட்டர் உதவியுடன் 100 படுக்கைகளும் அமைக்கப்பட்டன. இதற்காக மின்சாரத் தொகை மட்டும் 12 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது.
இந்நிலையில் டிடி கல்லூரியை கரோனா வார்டாகப் பயன்படுத்தியதற்குத் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டிய 367 கோடி ரூபாயைத் தர உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இம்மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பாக ஏப்ரல் 16ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? ஈடிவி பாரத்துக்கு நல்லக்கண்ணுவின் பதில்கள்