திருவள்ளூர்: வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று (அக்.5) முதல் கனமழை பெய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம், பெருமாநல்லூர் கிராமத்தில் கனமழை காரணமாக வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
வீடுகளுக்குள் புகுந்த நீரால் பொதுமக்கள் அவதி
மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
வீடுகளில் தேங்கியுள்ள நீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் டாடா குழும தலைவர் சந்திப்பு