திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த பழனிவேல் சொந்தமாக வீடு கட்டிவருகிறார். இந்த கட்டட பணிகளை திருத்தணி அருகே உள்ள தெக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த சதாசிவம் என்பவர் செய்து வந்தார்.
கட்டட பணிக்கு தண்ணீர் தேவைப்பட்டதால் சதாசிவம் மோட்டாரை இயக்கியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் சதாசிவம் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த சதாசிவத்திற்கு விஜயா என்கிற மனைவியும், சோனியா, சூர்யா என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இதையும் படிங்க: திருமணத்திற்கு மீறிய உறவை தட்டிக்கேட்ட பெண் கொலை: இளைஞர் கைது!