ETV Bharat / state

திருவள்ளூரில் ரூ.33 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி தொடக்கம்! - திருவள்ளூர் எம்எல்ஏ வி ஜி ராஜேந்திரன்

திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ரூ. 33 கோடியில் புதிய நவீன பேருந்து நிலையத்திற்கு திருவள்ளூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி. ஜி ராஜேந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.

திருவள்ளூரில் 33 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி தொடக்கம்

author img

By

Published : Jul 7, 2023, 10:25 PM IST

திருவள்ளூரில் 33 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி தொடக்கம்

திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, செங்கல்பட்டு, திருப்பதி, அரக்கோணம், பொன்னேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நாள் தோறும் 157 புறநகர் பேருந்துகள், விழுப்புரம் கோட்டம் மூலமாக இயக்கப்படுகின்றன. 72 சாதாரண கட்டண பேருந்துகள், மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படுகின்றன.

மேலும், 46 நகர பேருந்துகள் மற்றும் 14 சாதாரண கட்டண பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதே போல் 50க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளும் வந்து செல்கின்றன. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திருவள்ளூருக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பேருந்துகளில் வருகை தருகின்றனர்.

அது மட்டுமல்லாமல் பேருந்து நிலையத்திற்கு உள்ளே வரும் சாலை குறுகிய சாலையாக இருப்பதால், மாலை நேரத்தில் பள்ளி விடும்போது போக்குவரத்து நெரிசல் ஒரு பக்கமும், விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுமோ என்ற அச்சம் மறுபக்கமும் அவ்வழியாக செல்லும் அனைவருக்கும் தோன்றும்.

நகரின் மையப் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியபடியே நாள்தோறும் செல்கின்றனர். அதே போல் காலை மாலை நேரங்களில் நாள்தோறும் படிக்கட்டுகளில் தொங்கியபடியே மாணவர்கள் செல்லும் நிலையும் உள்ளது. இதனால் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் அதிகளவில் காணப்படுகிறது.

எனவே போக்குவரத்து நெரிசலை குறைக்க மாற்று இடத்தில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என பொது மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், திருவள்ளூரிலிருந்து ஊத்துக்கோட்டை செல்லும் சாலையில், திருவள்ளூர் நகராட்சி எல்லையை ஒட்டிய வேடங்கிநல்லூர் என்ற பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டது.

இந்நிலையில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று திருவள்ளூர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேடங்கி நல்லூரில் 122/5 என்ற சர்வே எண்ணில் ரூ.33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நவீன பேருந்து நிலையம் அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

எனவே இந்த புதிய பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, நகர மன்ற தலைவர் உதய மலர் பாண்டியன் தலைமையில் நகராட்சி ஆணையர் போ. வி. சுரேந்திர ஷா முன்னிலையில் நடைபெற்றது. இதில் திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் கலந்து கொண்டு புதிய பேருந்து நிலையத்திற்கான வரைபடத்தையும், இடத்தையும் ஆய்வு செய்து பூமி பூஜையில் கலந்து கொண்டு முதல் கல்லை எடுத்துக் கொடுத்து கட்டுமான பணியை தொடங்கி வைத்தனர்.

இதையும் படிங்க: "எந்த ஒரு மனிதரையும் சாதியின் பெயரால் தள்ளி வைக்கக் கூடாது"- முதலமைச்சர் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.