College Student Commits Suicide: சென்னை மாநிலக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவன் குமார், கடந்த 29ஆம் தேதி திருநின்றவூர் ரயில் நிலையம் அருகே ரயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலைக்குத் தூண்டிய பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த மனோஜ் என்ற மாணவனை திருவள்ளூர் ரயில்வே காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட மாணவன், "எனது நண்பர்களுடன் சேர்ந்து குமாரை ராகிங் செய்தேன். பின்னர் நாங்கள் அங்கிருந்து சென்றுவிட்டோம். ஆனால் குமார் தற்கொலை செய்துகொள்வான் என்று நினைக்கவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் தலைமறைவாக உள்ள ஆறு மாணவர்களை ரயில்வே காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர். இந்த வழக்கு தற்போது சட்டப்பிரிவு 174 லிருந்து 306-க்கு மாற்றம்செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவர் தற்கொலை