தமிழ்நாடு அரசின் இல்லந்தோறும் இருளர் சான்றிதழ் வழங்கும் திட்டம் தொடக்க விழா இன்று மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது. அம்மாவட்டத்திற்குட்பட்ட விடைகள் குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற விழாவில் ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், கோட்டாட்சியர் வித்யா ஆகியோர் வீடு வீடாகச் சென்று சான்றிதழ்களை வழங்கினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், "இத்திட்டத்தின் முதல் கட்டமாக திருவள்ளூர் வருவாய் கோட்டத்தில் 679 பயனாளிகளுக்கு முதல்கட்டமாக வழங்கப்படுகிறது. இதனை மாவட்டம் முழுவதுமுள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் சான்றிதழ் வழங்கப்படும்" என்றார்.
இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து, திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் கூட்டு பண்ணை திட்ட கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியர் மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இதில் 2019-20ஆம் ஆண்டிற்கான கூட்டுப் பண்ணை திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்களை அலுவலர்கள், விவசாயிகளிடம் எடுத்துரைத்தனர்.
இந்தக் கூட்டத்தில், இயந்திர உற்பத்தியாளர்கள் கொண்டுவந்த நவீன இயந்திரங்கள் விவசாயிகளுக்கு காட்சிப்படுத்தப்பட்டது. மேலும், மானிய விலையில் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் விற்பனை செய்ய வேளாண் துறை மூலம் கொள்முதல் செய்ய வழிவகை செய்யப்பட்டது.
இதையும் படிங்க: 'அரசின் திட்டங்களை முறையாக மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்போம்'