ஆசியாவிலேயே மிகப்பெரிய சந்தை கோயம்பேடு சந்தை. தற்போது அது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால், அதற்கு பதிலாக திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை துணைக்கோள் நகரத்தில் சந்தை தொடங்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் நேரில் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில், சந்தைக்கு வெளிப்பகுதியில் இருந்துவரும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமிநாசினிகள் முழுமையாக தெளிக்கப்பட்ட பின் அனுமதிக்கப்படுவது, மருத்துவ முகாம்கள் வாயிலாக வெளிநபர்கள் பரிசோதிக்கப்படுவது, முகக்கவசம் அணிந்து பணிபுரிவது, தகுந்த இடைவெளி கடைபிடிக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு கரோனா தடுப்பு நடவடிக்கைகள் உறுதி செய்யப்பட்டன.
அப்போது நகராட்சி நிர்வாக ஆணையர், கரோனா பெருந்தொற்று தடுப்பு பணிகள் கண்காணிப்பு அலுவலர் பாஸ்கரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: பெருங்களத்தூரில் கஞ்சா விற்பனை: ஒருவர் கைது!